திருப்பதிக்கு நெய் முதல் ஏகப்பட்ட வழிகளில் மதுரை ஆவினில் பல கோடி மோசடி:தணிக்கையில் அம்பலம்

திருப்பதிக்கு நெய் முதல் ஏகப்பட்ட வழிகளில் மதுரை ஆவினில் பல கோடி மோசடி:தணிக்கையில் அம்பலம்
திருப்பதிக்கு நெய் முதல் ஏகப்பட்ட வழிகளில் மதுரை ஆவினில் பல கோடி மோசடி:தணிக்கையில் அம்பலம்

மதுரை ஆவினில், 2016 முதல் 2020 வரை பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது தணிக்கை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை ஆவினில் நிகழ்ந்த முறைகேடுகள், நிர்வாக குளறுபடிகள் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான தணிக்கை அறிக்கையிலும் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திருப்பதிக்கு நெய் விற்பனை செய்யப்பட்டதில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வழிகளில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளது தணிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் 2017-18ஆம் ஆண்டு பால் பை அடுக்குதல், பால் டப் சுத்தம் செய்தல் மற்றும் பால் கேன் மூடியை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மொத்தமாக தினக்கூலியாக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ள துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் சரவணபெருமாள் கொண்ட மாவட்ட ஆய்வுக் குழுவை அரசு செயலர் மைதிலி ராஜேந்திரன் நியமித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com