\
ஆத்தூர்: துக்க நிகழ்விற்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ஆத்தூர்: துக்க நிகழ்விற்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ஆத்தூர்: துக்க நிகழ்விற்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
Published on: 

ஆத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (32). இவர் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் சேவை பிரிவில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தில்லை நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு நேற்றிரவு சென்றுள்ளார். பின்னர் இன்று அங்கிருந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வீட்டினுள் சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு கோகுல் தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் அங்கு வந்த போலீசார் சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com