குற்றம்
பெண்ணை தாக்கி, நகை பறிப்பு - சிசிடிவி காட்சிகள்
பெண்ணை தாக்கி, நகை பறிப்பு - சிசிடிவி காட்சிகள்
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெண்ணைத் தாக்கி 11 சவரன் நகை பறிக்கப்பட்டதன் சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர் நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் கடந்த 27ஆம் தேதி வீட்டிற்கு அருகே நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் அஸ்வினியை தாக்கி, கீழே தள்ளி, அவரது வாயை துணியால் பொத்தி 11 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.
இந்த காட்சிகள் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை வைத்து தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 30 வயதுக்குள் இருக்கும் என கணித்துள்ள காவல்துறையினர், பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.

