\
கஞ்சா வாங்கி தர மறுத்ததால் சிறுவன் மீது தாக்குதல்

கஞ்சா வாங்கி தர மறுத்ததால் சிறுவன் மீது தாக்குதல்

கஞ்சா வாங்கி தர மறுத்ததால் சிறுவன் மீது தாக்குதல்
Published on

திருச்செந்தூர் அருகே கஞ்சா வாங்கி தர மறுத்ததால் 5 பேர் கொண்ட கும்பல் சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கஞ்சா வாங்கி தர மறுத்ததால் சுரேஷ் என்ற‌ சிறுவனின் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிறுவனிடம் தங்கதுரை என்பவர் 500 ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி தருமாறு கூறியுள்ளார். இதற்கு சுரேஷ் மறுப்பு தெரிவித்ததால் அவனை தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய சிறுவன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com