குற்றம்
போலீஸ் ரோந்து வாகனம் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது
போலீஸ் ரோந்து வாகனம் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது
சென்னை தியாகராயநகரில் காவல்துறை ரோந்து வாகனம் மீது கல்வீசி தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை தியாகராய நகர் பெரியார் சிலை முன்பு நேற்றிரவு நின்றிருந்த காவல்துறை ரோந்து வாகனத்தை சிலர் கல் வீசி தாக்கினர். சத்தம் கேட்டு ஓடி வந்த காவல்துறையினர் கண்ணாடியை உடைத்து கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் கண்ணாடியை உடைத்த நபர் திருவல்லிக்கேணி நடேசன் சாலையை சேர்ந்த கார்த்தி என்றும், அவர் அப்போது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
அவர் வைத்திருந்த அடையாள அட்டை மூலம் கார்த்தி நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது. நடேசன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் கல் வீசிய மற்ற 4 பேர் தலைமறைவாகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.