திமுக பிரமுகர் மீது தாக்குதல்
திமுக பிரமுகர் மீது தாக்குதல்PT

திமுக பிரமுகரை குறிவைத்து தாக்குதல்: கடலூரில் நடந்த பரபரப்பு சம்பவம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் தியாக இளையராஜா. இவர் தற்போது திமுகவில் இருந்து வருகிறார். இந்த நிலையில் மணவாளநல்லூர் கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்துகொண்டிருக்கும்போது அதே ஊரை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கள்ளத் துப்பாக்கி மூலம் தியாக இளையராஜாவை சுட முயற்சி செய்துள்ளது. அப்போது தப்பிக்கும் விதமாக காரில் ஏற முயற்சி செய்தபோது அந்த கும்பல் சுட்டதில் இடுப்பு கழுத்து உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com