ரூ.4.25 கோடியுடன் ஏடிஎம் வேன் ட்ரைவர் மாயம்! போலீஸார் தீவிர தேடல்

ரூ.4.25 கோடியுடன் ஏடிஎம் வேன் ட்ரைவர் மாயம்! போலீஸார் தீவிர தேடல்
ரூ.4.25 கோடியுடன் ஏடிஎம் வேன் ட்ரைவர் மாயம்! போலீஸார் தீவிர தேடல்

மும்பையில் ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய வேனில் கொண்டுசென்ற பணத்தை வேன் ஓட்டுநர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் மும்பையில் உள்ள ஏடிஎம்மில் பணத்தை நிரப்ப மேனேஜர், உதவியாளர் மற்றும் ஒரு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வீரருடன் பணத்தை வேனில் எடுத்துச் சென்றிருக்கின்றனர். போலன்ஜில் உள்ள ஒரு ஏடிஎம் மெஷினில் பணத்தை நிரப்ப மேனஜர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு வீரர் மூவரும் ஏடிஎம் அறைக்குள் சென்ற நேரத்தில் ஓட்டுநர் பணத்துடன் வேனை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து மேனேஜர் உடனே அருகிலிருந்த அர்னாலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தகவலின்படி, தீபாவளிக்கு மக்களுக்கு பணத் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக ஏடிஎம்களில் பணம் நிரப்பச் சென்றதாகவும், வேனுக்குள் சுமார் ரூ.4.25 கோடி பணம் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் வேன் டிரைவர் செம்பூரைச் சேர்ந்த ரோஹித் பாபன் ஆறு(26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்மீது பணத்தை கொள்ளையடித்த குற்றத்திற்காக இந்திய சட்டப்பிரிவு 392இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏடிஎம்மிற்கு அருகிலிருந்த சிசிடிவி காட்களை சோதித்து வருவதாகவும், மும்பையிலிருந்து அகமதாபாத் மற்றும் வாசை-பிவாண்டி சாலைகளில் போலீசாரை சோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அர்னாலா காவல் நிலையத்தின் ஆய்வாளர் மகேஷ் ஷெட்யே கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com