அரியலூரில் பட்டப்பகலில் பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதி வேலாயுத நகரில் வசித்து வருவபர் குணசேகரன். இவர் திட்டக்குடி பேருராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயபாரதி. கணவர் குணசேகரன் வேலைக்குப் போக, ஜெயபாரதி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்நேரத்தில் வீட்டிற்கு புகுந்த கொள்ளையர்கள், ஜெயபாரதியை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்கியதில் ஜெயபாரதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜெயபாரதியின் தாலிச் சங்கிலி உட்பட 15 சவரன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அந்தக் கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இருப்பினும் ஜெயபாரதி பணம், நகைக்காக தான் கொலை செய்யப்பட்டாரா அல்லது போலீஸாரின் கவனத்தை கொள்ளை போன்று திசை திருப்பும் முயற்சியில் செய்யப்பட்ட கொலையா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.