'சிக்கன் பக்கோடா வாங்கி தரேன்' - மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர்!

'சிக்கன் பக்கோடா வாங்கி தரேன்' - மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர்!

'சிக்கன் பக்கோடா வாங்கி தரேன்' - மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர்!
Published on

அரியலூரில் சிக்கன் பக்கோடா வாங்கித் தருவதாக மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் செட்டி திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணை வீட்டில் யாரும் இல்லாத போது சிக்கன் பக்கோடா வாங்கித் தருவதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடமை செய்துள்ளார்.

இதில், அந்தப் பெண் ஆறு மாத கர்ப்பமான நிலையில், அது பெற்றோர்களுக்குத் தெரியவந்ததை அடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ராஜமாணிக்கத்தை கைது செய்த போலீசார், அவரை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com