\
அரியலூர்: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

அரியலூர்: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

அரியலூர்: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
Published on: 

அரியலூரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரிடம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவெலம்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவர், ஆவின் நிறுவனத்தின் உதவி மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு நிரந்தர வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய சோமசுந்தரம், அருணிடம் 58 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற அருண்குமார், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் சோமசுந்தரம் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து தனிபடை அமைத்து அருண்குமாரை தேடிவந்த போலீசார், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே தனியார் விடுதியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com