\
அரியலூர்: தன்பாலின சேர்க்கைக்கு சிறுவனை கடத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூர்: தன்பாலின சேர்க்கைக்கு சிறுவனை கடத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூர்: தன்பாலின சேர்க்கைக்கு சிறுவனை கடத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை
Published on: 

அரியலூரில் தன்பாலினச் சேர்க்கைக்கு சிறுவனை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானம் (31). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவனை கடந்த 2018ஆம் ஆண்டு தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார். இதை அறிந்த அவரது தாய் வெங்கனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் தன்பாலினச் சேர்க்கைக்கு சிறுவனை ஈடுபடுத்திய ஞானம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இதனையடுத்து போலீசார் அவரை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com