காதலிக்குமாறு வற்புறுத்தி டார்ச்சர்! சிறுமியை கடத்தி 10 நாட்களாக கொடுமை செய்த இளைஞர் கைது!

காதலிக்குமாறு வற்புறுத்தி டார்ச்சர்! சிறுமியை கடத்தி 10 நாட்களாக கொடுமை செய்த இளைஞர் கைது!
காதலிக்குமாறு வற்புறுத்தி டார்ச்சர்! சிறுமியை கடத்தி 10 நாட்களாக கொடுமை செய்த இளைஞர் கைது!

அரியலூர் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று 10 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்து வந்த நிலையில், ஜெயக்குமார் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை பைக்கில் கடத்திச் சென்ற ஜெயக்குமார், அவருக்கு சொந்தமான காட்டுபகுதியில் தனி வீட்டில் வைத்து கடந்த 10 நாட்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த ஜெயக்குமாரின் தாயார் சாந்தியும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் கடந்த 10 நாட்களாக தங்களது மகளை காணவில்லை என ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சிறுமி வீட்டிற்கு வந்த நிலையில், யாரிடமும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது ஜெயக்குமார் தன்னை அவரது பைக்கில் அழைத்துச் சென்று முந்திரி காட்டில் உள்ள தனி வீட்டில் வைத்து 10 நாட்களாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி, சிறுமியை காதலிக்க வற்புறுத்தி கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஜெயக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ஜெயக்குமாரின் தாயார் சாந்தியையும் கைது செய்தனர்.

மேலும் ஜெயக்குமார் ஜெயங்கொண்டம் கிளை சிறைக்கும், அவரது தாய் சாந்தி திருச்சி பெண்கள் தனி சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com