கணவர் மரணம் குறித்து மாறிமாறி உளறிய மனைவி.. விசாரணையில் அம்பலமான திட்டமிட்ட கொலை!

கணவர் மரணம் குறித்து மாறிமாறி உளறிய மனைவி.. விசாரணையில் அம்பலமான திட்டமிட்ட கொலை!
கணவர் மரணம் குறித்து மாறிமாறி உளறிய மனைவி.. விசாரணையில் அம்பலமான திட்டமிட்ட கொலை!

ஆரணியில் கூலிப்படையுடன் சேர்ந்து முன்னாள் ராணுவ வீரரான கணவனை, கொன்ற மனைவி மற்றும் அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவரும் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் என்பவரின் மகன் வெற்றிவேல். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, லிங்கேஸ்வரன், நீதர் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரணி தேனருவி நகரில் வெற்றிவேல், தனது தங்கை பொம்மியின் கணவர் நாகராஜன் மூலம் இடம் வாங்கி வீடு கட்டும் பணி தொடங்கியுள்ளார். பின்னர், வீடு கட்டும் பணியை நாகராஜிடம் விட்டு விட்டு வெற்றிவேல் ராணுவத்திற்குச் சென்றுள்ளார். இதையடுத்து புதிய வீடு கட்டும் போது நாகராஜனுக்கும், ரேவதிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற வெற்றிவேல், கடந்த 2021 ஆம் ஆண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, நாகராஜன் மற்றும் ரேவதி இடையேயான திருமணத்தை மீறிய உறவு தெரிய வந்துள்ளது. இதனால் இருவரையும் வெற்றிவேல் கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஒண்ணுபுரம் கிராமத்திலுள்ள ரேவதியின் அண்ணன்கள் பாஸ்கரன், பாபு, நாகராஜன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் மீது கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாகவே சண்டை வழக்கு ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் வெற்றிவேல் மீது கோபம் கொண்ட ரேவதி தனது பிள்ளைகளை அழைத்துச் சென்று தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தனக்கு இடையூறாக இருக்கும் கணவர் வெற்றிவேலை தீர்த்துக்கட்ட கடந்த மார்ச் மாதம் முதல் கொலைக்கான திட்டங்களை மனைவி ரேவதி தீட்டியுள்ளார். இதற்காக வேலூர் மாவட்டம் மோட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் ரூ2 லட்சம் பேசி 60 ஆயிரத்தை அட்வான்ஸாக கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி வெற்றிவேல் 2 சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காயமடைந்துள்ளார்.

இது குறித்து உறவினர் மூலம் தெரிந்து கொண்ட ரேவதி 5 ஆம் தேதி கணவன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார், பின்னர் இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். கணவனை தீர்த்துக்கட்ட இதுதான் சரியான தருணம் என கருதிய ரேவதி, நாகராஜன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோருக்கு போன் செய்து கொலை செய்ய வரவழைத்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த நாகராஜன் மற்றும் ராஜேஷ் ஆகியோருடன் ரேவதியும் சேர்ந்து வெற்றிவேலை கொலை செய்துள்ளனர். பின்னர், தனது கணவர்  முடியாமல் துடிக்கிறார் வாருங்கள் என்று உறவினருக்கு போன் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து வெற்றிவேலின் உடல் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, உடல்நிலை சரியில்லாமல் தனது கணவர் இறந்து விட்டார் என்றும், தனது வீட்டில் நகை திருட வந்தவர்கள் கணவனை கொன்று விட்டார்கள் என்றும் மாறி மாறி கூறியபடி ரேவதி நாடகமாடியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று கூறி ராணுவ வீரரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இதனால் சந்தேக மரணம் என்று விசாரணை செய்த போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினார். இதில், மனைவியே கூலிப்படையினருடன் சேர்ந்து கணவனை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ரேவதி மற்றும் நாகராஜன் ஆகியோரை ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற்றும் போலீசார் கைது செய்து ஆரணி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷ் வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com