housept desk
குற்றம்
திண்டுக்கல் மாவட்ட அரசு ஊழியரின் தேனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளரின் தேனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர் மெகத் ஷாஜகான். இவர் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் வீரப்ப அய்யனார் மலை கோவிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

housept desk
இவர் மீது ஏராளமான லஞ்சப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, தேனி லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான ஆறுபேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. சோதனை முடிவில் தான் அதிகாரபூர்வமான முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.