‘உங்க மேல புகார் வந்திருக்கு’ - சக ஊழியர்களை பிளாக் மெயில் செய்து பணம் பறித்த அதிகாரி!

‘உங்க மேல புகார் வந்திருக்கு’ - சக ஊழியர்களை பிளாக் மெயில் செய்து பணம் பறித்த அதிகாரி!
‘உங்க மேல புகார் வந்திருக்கு’ - சக ஊழியர்களை பிளாக் மெயில் செய்து பணம் பறித்த அதிகாரி!

தனது துறையின் கீழ் உள்ள மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்களுக்கு எதிராக போலியான லஞ்ச புகாரை தயார் செய்து அதனை வைத்து மிரட்டி தனது துறை அதிகாரிகளிடமே லஞ்சம் பெற்றதாக, சமூக நலத்துறை இணை இயக்குனர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இணை இயக்குனருக்கு உதவியாக செயல்பட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசில் உள்ள சமூக நலத்துறையானது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக அதிகாரிகள் உள்ளார். இந்தத் துறையில் தற்போது மதிய உணவு திட்டத்தின் இணை இயக்குனராக இருப்பவர் ரேவதி.

இவர் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் மற்றும் சத்துணவு ஊட்டச்சத்து மாவட்ட திட்ட அதிகாரிகளுக்கு எதிராக போலியான லஞ்ச புகாரை உருவாக்கி, அந்தப் புகார் தங்களுக்கு (தலைமை அலுவலகத்துக்கு) வந்திருப்பதாக கூறி “அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் லஞ்சப் பணம் வேண்டும்” என உடன் பணியாற்றிய துறை சார்ந்தவர்களிடமே கேட்டு வந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. இதை நம்பி, சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி 3 லட்சம் திருநெல்வேலி மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி சேலம் மாவட்ட சமூகநலத்துறை பெண் அதிகாரி 3 லட்சம் என ஒவ்வொருவரையும் நேரடியாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு லஞ்சப் பணத்தை கேட்டு உள்ளார்.

லஞ்சப் ஒழிப்புத் துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக, மாவட்ட அதிகாரிகள் பலரும் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை லஞ்சமாக கொடுத்து உள்ளனர். லஞ்சமாக பெரும் பணத்தை பெறுவதற்காகவே 6 தனியார் ஏஜெண்டுகளை ரேவதி தனக்கு கீழ் அமர்த்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. லஞ்சப் பணத்தை நேரடியாக பெற்றால் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்கிக் கொள்வோம் என்று எண்ணிய இணை இயக்குனர் ரேவதி, தனக்கு கீழ் கோவிந்தராஜன் என்ற நபரை நியமித்து, கோவிந்தராஜனுக்கு கீழ் ராஜ்குமார் காளிசரண், பாபு, விநாயகமூர்த்தி ஆண்ட்ரூ லார்சன் ஆகியோர் மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து லஞ்ச பணத்தை தங்களுடைய வங்கி கணக்கில் பெற்றிருக்கிறார்கள். அதன் பின்பு ரொக்கமாக பணத்தை எடுத்து கோவிந்தராஜன் மூலமாக ரேவதியிடம் லஞ்ச பணத்தை சேர்த்திருக்கிறார்கள்.

சில சமயங்களில் லஞ்ச தொகையில் பாதி பணத்தை தரகர்கள் மூலமாகவும் மீதி பணத்தை ஏடிஎம்மில் டெபாசிட் செய்யும் மிஷின் மூலமாக தனது வங்கி கணக்கிற்கும் பெற்றது தெரியவந்துள்ளது.

வாட்ஸ்அப், ஏடிஎம் டெபாசிட் மெஷின் உள்ளிட்ட அதிநவீன முறைகளில் அனைத்தையும் உபயோகித்து இணை இயக்குனர் ரேவதி லஞ்சத்தை பெற்றதை உறுதிசெய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 6 தனியார் நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com