\
உ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்: கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்

உ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்: கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்

உ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்: கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்
Published on: 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மற்றொரு பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்

உத்திரப்பிரதேச மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பட்டியலினப் பெண் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பணிக்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் அன்று வீடு திரும்ப வில்லை. மாறாக அடுத்த நாள் இரவு கையில் குளுக்கோஸ் ஊசியுடன் வீடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமானதால் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

விசாரணையில் அவர் இரண்டு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், இரண்டு நபர்களை காவலர்கள் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com