ஆந்திரா டூ சென்னை: கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாக 9 பேர் கைது

ஆந்திரா டூ சென்னை: கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாக 9 பேர் கைது

ஆந்திரா டூ சென்னை: கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாக 9 பேர் கைது
Published on

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ததாக 2 பெண்கள், உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த புகாரையடுத்து கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர், எருக்கஞ்சேரி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக இருந்த சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின்னாக பதிலளித்தனர்.

இதையடுத்து அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் தாரணி (24), வினோதினி (23) மற்றும் திருநங்கை ஹாரிதா (22), மதன் (22), கல்வியரசன் (21), ஜீவானந்தம்(22), ஆல்பட் (26), லோகேஷ் (20), கேப்ரியல் மனோஜ்(20) என்பதும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சென்னை கொடுங்கையூர் பகுதியில் சிறு, சிறு பொட்டலங்களாக தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து 9 பேரையும் கைது செய்த கொடுங்கையூர் போலீசார், அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 3 இ சக்கர வாகனங்கள், 5 கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com