பேடிஎம் கணக்கில் இருந்து காணாமல்போன பணம்: காவல் நிலையத்தில் புகார் !

பேடிஎம் கணக்கில் இருந்து காணாமல்போன பணம்: காவல் நிலையத்தில் புகார் !

பேடிஎம் கணக்கில் இருந்து காணாமல்போன பணம்: காவல் நிலையத்தில் புகார் !
Published on

பேடிஎம் சேமிப்பு கணக்கில் இருந்த ரூ.48 ஆயிரம் பணம் திருடப்பட்டுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார் பன்சாரி (35). இவர் பேடிஎம் செயலியை நீண்ட மாதங்களாக பயன்படுத்தி வருகிறார். கடந்த மாதம் 18-ஆம் தேதி இவரது பேடிஎம் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.47ஆயிரத்து 705 ரூபாய் பணத்தை திருடி விட்டதாக இவரது செல்போனிற்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரவிகுமார் உடனே பணம் திருட்டு சம்பவம் தொடர்பாக ஆன்லைன் மூலம் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ரவிகுமார் மீண்டும் பூக்கடை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பேடிஎம் செயலி மூலம் எந்தவிதமான பணம் பரிமாற்றமும் செய்யவில்லை என தெரியவந்தது.

இதனால் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட பேடிஎம் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com