\
குழந்தை படிக்காததால் குடிபோதையில் சூடுவைத்த தந்தை! கேரளாவில் நிகழ்ந்த கொடூரம்

குழந்தை படிக்காததால் குடிபோதையில் சூடுவைத்த தந்தை! கேரளாவில் நிகழ்ந்த கொடூரம்

குழந்தை படிக்காததால் குடிபோதையில் சூடுவைத்த தந்தை! கேரளாவில் நிகழ்ந்த கொடூரம்
Published on

கேரளாவில் தனது 8 வயது மகன் சரியாக படிக்காததால் சூடுவைத்த தந்தையை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் சிவகுமார்(31). இவருக்கு 8 வயதில் மகன் இருக்கிறான். தினமும் குடித்துவிட்டுவந்து தனது மகனை அடித்ததுடன், சில நாட்களுக்கு முன்பு நன்றாக படிக்கவில்லை என்று கூறி, கரண்டியை சுடவைத்து, சிறுவனுக்கு கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் சூடு வைத்திருக்கிறார் சிவகுமார். இதனால் சிறுவன் அலறி துடித்திருக்கிறான்.

இதை கவனித்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் ஜனவரி 30ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அந்த தகவலின்பேரில் சிறுவனை மீட்ட போலீஸார், அவனை பத்தனம்திட்டா குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். குடிபோதையில் இருந்த சிவக்குமாரை கைதுசெய்த போலீஸார் அவரை காவல்துறை கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com