திருவாரூர்: அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டித்துக் கொலை

திருவாரூர்: அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டித்துக் கொலை

திருவாரூர்: அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டித்துக் கொலை
Published on

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டார்.

மு0த்துப்பேட்டையை அடுத்த கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். 35 வயதான் ராஜேஷ் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு ஆலங்காடு கிராம ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுகவில் இணைந்தார். இன்று காலை தனது வீட்டிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஆலங்காடு அருகே மறைந்திருந்த மர்மகும்பல் அவரை விரட்டிச்சென்றது.

இருசக்கர வாகனத்தில் நிற்காமல் அவர் தொடர்ந்த நிலையில் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் அவரின் தலையை துண்டித்து அருகே வீசிவிட்டு தப்பியது. கொலை செய்யப்பட்ட ராஜேஷ்மீது 2015ஆம் ஆண்டு மதன் கொலை தொடர்பான வழக்கு, 2020ஆம் ஆண்டு வினோத் என்பவரை கொலைசெய்ய முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com