’அவதூறு பரப்புகிறார்’-ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது மகளிர் அணி பொறுப்பாளர் புகார்

’அவதூறு பரப்புகிறார்’-ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது மகளிர் அணி பொறுப்பாளர் புகார்

’அவதூறு பரப்புகிறார்’-ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது மகளிர் அணி பொறுப்பாளர் புகார்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது மகளிர் அணி பொறுப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டொன்றை வைத்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிர் அணி பொறுப்பாளர் ரீட்டா என்பவர் பற்றி அவதூறாகவும் மிக மோசமாகவும் பெண்ணொருவரிடம் செல்போனில் பேசியதாக அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால், தான் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளதாக ரீட்டா ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சர்ச்சைக்குரிய இந்த ஆடியோ சம்பந்தமாக தனக்கு எம்எல்ஏ ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com