தருமபுரி: அதிமுக-வினரின் பேனர்களை கிழித்த மர்ம நபர்கள்

தருமபுரி - அரூரில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அதிலும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார், அரூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி ஆகியரோரின் முகம் மட்டும் அதிகப்படியாக கிழிக்கப்பட்டிருந்தது.
கிழிக்கப்பட்ட பேனர்
கிழிக்கப்பட்ட பேனர்PT

தருமபுரி மாவட்டம் அரூருக்கு பல்நோக்கு பயிற்சி மையத்தை தொடங்கி வைப்பதற்காக அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வுக்காக தருமபுரி முழுவதும் அதிமுக சார்பில் வரவேற்பு பதாகைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. இன்று நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் மண்டபத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்துள்ளனர்.

அதில் குறிப்பாக அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார், அரூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி ஆகியரோரின் முகம் மட்டும் அதிகப்படியாக கிழிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அதிமுகவினர் அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com