காஞ்சிபுரம்: திமுக ஊராட்சி மன்ற உறுப்பினரை தாக்கியதாக அதிமுக பிரமுகர் உட்பட மூவர் கைது

காஞ்சிபுரம்: திமுக ஊராட்சி மன்ற உறுப்பினரை தாக்கியதாக அதிமுக பிரமுகர் உட்பட மூவர் கைது

காஞ்சிபுரம்: திமுக ஊராட்சி மன்ற உறுப்பினரை தாக்கியதாக அதிமுக பிரமுகர் உட்பட மூவர் கைது
Published on

சோமங்கலம் அருகே திமுக ஊராட்சி மன்ற உறுப்பினரை தாக்கியதாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பட்டு ஊராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் கமலகண்ணன் (33), இவர், கடந்த 22 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.

அப்போது அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் (56) மற்றும் அவரது மகன்கள் ராமன் (29), லட்சுமணன் (29), ஆகிய மூவரும் சேர்ந்து திமுக கவுன்சிலரை முன் விரோதம் காரணமாக கார் சாவியால் தாக்கியும், கையால் அடித்து விட்டும் தப்பியோடிவிட்டனர்.

இதில், கை மற்றும் கன்னத்தில் காயமடைந்த திமுக கவுன்சிலர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சோமங்கலம் போலீசார் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றம் அவரது மகன்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com