“என்னை வீட்டைவிட்டு போக சொல்லி மிரட்டுகிறார்” - தலைமைச் செயலகத்தில் நடிகர் சரவணனின் மனைவி புகார்

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் பிரிவில் மனு கொடுத்துள்ளார் நடிகர் சரவணனின் மனைவி
actor saravanan
actor saravananFile image

தன்னுடைய நகைகளை விற்று வாங்கிய வீட்டை விட்டு தன்னையே வெளியே போகச் சொல்லி நடிகர் சரவணன் மிரட்டுவதாக அவரது மனைவி சூரியஸ்ரீ முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு கொடுத்ததோடு பத்திரிகையாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

Saravanan
Saravanan

நடிகர் சரவணனுக்கு சூரியஸ்ரீ என்ற மனைவி இருக்கும் நிலையில், அவர் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதை குறிப்பிட்டு, தான் இருக்கும் இருக்கும் வீட்டில் அடியாட்களுடன் வந்து சரவணன் மிரட்டுவதாகவும், வீட்டை காலி செய்யுமாறு தன்னை அடித்து மிரட்டி ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாகவும் அவரது மனைவி சூரியஸ்ரீ தற்போது பேட்டி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சூரியஸ்ரீ பேசும்போது, “நடிகர் சரவணன் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய நகைகள் மற்றும் கையில் இருந்த ரொக்கம் எல்லாவற்றையும் சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை வாங்குவதற்காக சரவணனிடம் கொடுத்தேன் நான். அதை வைத்து வீடு வாங்கிவிட்டு, பின் அந்த வீட்டை சரவணன் தன் பெயரில் எழுதிக் கொண்டார்.

சரவணன்
சரவணன்

இடையில் பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் என்னுடைய சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு வந்த சரவணன், பிக்பாஸ் சென்று வந்த பிறகு கையில் கொஞ்சம் பணம் கிடைக்கப்பெற்றார். அப்போது ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்படவே, அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் பக்கத்து தெருவில் வேறு ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார். மேலும் சமீப நாட்களாக என்னுடைய வீட்டிற்கு வந்து, என்னை உடனே வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு ஆபாச வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு 30 அடியாட்களோடு வந்து என்னை மிரட்டினார்” என்றுள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய நண்பர்களோடு வந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் பிரிவில் மனு கொடுத்துள்ள அவர், பத்திரிகையாளர்களை சந்தித்து மேற்குறிப்பிட்ட தகவலையும் தெரிவித்துள்ளார். ‘அரசு இதில் தலையிட்டு தனக்கு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும்’ எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com