\
பெரியார் சிலை மீது காவிசாயம் - ஒருவர் சரண்

பெரியார் சிலை மீது காவிசாயம் - ஒருவர் சரண்

பெரியார் சிலை மீது காவிசாயம் - ஒருவர் சரண்
Published on

கோவையில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசிய வழக்கில் ஒருவர் சரண் அடைந்துள்ளார்.

கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. அந்த சிலையில் மர்ம ஆசாமிகள் காவி சாயம் பூசியிருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வந்தனர். மர்ம ஆசாமிகளின் இந்த செயல்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரியார் சிலை மீது காவிசாயம் பூசிய வழக்கில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் சரண் அடைந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com