\
மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட கணவர் கொலை: குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட கணவர் கொலை: குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட கணவர் கொலை: குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
Published on

திருமக்கோட்டை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் வேதாரண்யம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உக்காடு தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் டிராக்டர் ஒட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ரமேஷின் மனைவியை எதிர் வீட்டில் வசிக்கும் அன்புதாசன் என்பவர் குடிபோதையில் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட ரமேஷை அன்புதாசன் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ஒட்டுனர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அன்புதாசன் வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த அன்புதாசனை வரும் அக்டோபர் 22 -ம் தேதி வரை திருத்துறைப்பூண்டி சிறையில் அடைக்க நீதிபதி லிசி உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com