செஞ்சி கிளை சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளி

செஞ்சி கிளை சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளி

செஞ்சி கிளை சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளி
Published on

செஞ்சி கிளை சிறையில் கொசு மருந்தை சாப்பிட்டு குற்றவாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலகுரு (வயது 20) என்பவர் குற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டு செஞ்சி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பிணை கிடைக்காத மன உளைச்சலில் கொசு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட போலீசார் செஞ்சி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்துள்ளனர். தற்போது மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கிளைச்சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com