வேலூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் - மேலும் ஒருவர் கைது

வேலூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் - மேலும் ஒருவர் கைது

வேலூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் - மேலும் ஒருவர் கைது
Published on

வேலூரில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17ஆம் தேதி காட்பாடியைச் சேர்ந்த பெண் மருத்துவர், தனது ஆண் நண்பருடன் திரையரங்கிற்கு சென்றுவிட்டு நள்ளிரவில் ஆட்டோவில் திரும்பியபோது கத்திமுனையில் மிரட்டப்பட்டு அந்த பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் அவர்களிடமிருந்து செல்போன், பணம், ஏடிஎம் கார்டுகள் போன்றவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே  மணிகண்டன், பார்த்திபன், பாரத் மற்றும் 2 சிறார்கள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த 5 பேருக்கும்  அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com