பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலும் பணம் கொள்ளை: ரூ.2,90,500 களவு; காவல்துறை விசாரணை

பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலும் பணம் கொள்ளை: ரூ.2,90,500 களவு; காவல்துறை விசாரணை

பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலும் பணம் கொள்ளை: ரூ.2,90,500 களவு; காவல்துறை விசாரணை
Published on

சென்னை பல்லாவரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திலும் நூதன முறையில் சுமார் 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-களில் லட்சக்கணக்கான ரூபாய் களவு போனதை அடுத்து, பெருநகரம் முழுவதும் எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையங்களில் உள்ள பணத்தை சரிபார்க்குமாறு வங்கிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி, பல்லாவரம் பழைய ட்ரங்க் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎமில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அந்த ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com