\
15 வயது சிறுமியை ரகசிய திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

15 வயது சிறுமியை ரகசிய திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

15 வயது சிறுமியை ரகசிய திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது
Published on

மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை கைது செய்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (21). இவர் தரங்கம்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி பெற்றோரை பார்ப்பதற்காக குத்தாலம் வரும்போது, காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை தனியே சந்தித்து பாலியல் தொடர்பு வைத்ததோடு சிறுமியை ரகசிய திருமணமும் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தரங்கம்பாடியில் இருந்த சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உறவினர்கள் விசாரித்தபோது நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் குழந்தை திருமண தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிந்து மாரிமுத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com