மதுபோதையில் நண்பனை வெட்டிக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்
நீடாமங்கலம் அருகே குடிபோதையில் நண்பனை வெட்டிக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வையாகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான மணிகண்டன், ஜெய்சங்கர் ஆகிய இருவரும்; அப்பகுதியில் இன்று நடைபெற்ற உறவினரின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு பக்கத்து தெருவில் உள்ள கடைக்குச் சென்றபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வாய்த்தகராறு முற்றிய நிலையில் கை கலப்பான மாறியுள்ளது. அப்போத மணிகண்டன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெய்சங்கரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஜெய்சங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெய்சங்கரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மணிகண்டன், கொராடாசேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.