\
திருமணம் செய்ய மறுப்பு: காதலியை கத்தியால் குத்திய காதலன்

திருமணம் செய்ய மறுப்பு: காதலியை கத்தியால் குத்திய காதலன்

திருமணம் செய்ய மறுப்பு: காதலியை கத்தியால் குத்திய காதலன்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில் காதலித்த பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த சேலையூரில் வசித்து வருபவர் கோவிந்தன். இவரது மனைவி செல்வி, மகள்கள் மற்றும் மகனுடன் சொந்த ஊரான தொட்டியம் கிராமத்திற்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்தபோது, பத்தாம் வகுப்பு படித்து வந்த கோவிந்தனின் மகளும், நாமக்கல்லை சேர்ந்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், அந்த பெண்ணை பார்ப்பதற்கு தொட்டியம் கிராமத்திற்கு சென்றுள்ளார் சதீஷ். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென்று தான் மறைத்து வத்திருந்த கத்தியால் சதீஷ், அந்த பெண்ணை குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா, ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், திருமணம் செய்வதற்கு இளம்பெண் மறுத்ததால், இளைஞர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com