சென்னை: வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சென்னை: வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சென்னை: வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை
Published on

திருமணமான இரண்டே ஆண்டுகளில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பூங்கா நகர் பல்லவன் சாலையை சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளியான ராஜா மற்றும் சுதா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2014-ல் திருமணமாகி, 2015-ல் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. குழந்தையின் பிறந்தநாளுக்குப்பின், `திருமணத்தின்போது வரதட்சணையாக பேசப்பட்ட 5 சவரன் நகை, பிரிட்ஜ், வாசிங் மெஷின் ஆகியவற்றை இன்னும் தரவில்லை’ எனக்கூறி சுதாவை ராஜாவும், அவரது சகோதரி ஆனந்தியும் கொடுமைப்படுத்தி உள்ளனர். குழந்தையின் பிறந்தநாளுக்கு எடுத்த தங்க சங்கிலி, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றையும் தரவில்லை என்று கூறி மேலும் வரதட்சணை கேட்டும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

தொடர்ந்து ராஜா சுதாவை குடிபோதையிலும் தாக்கியதாலும், அவரது குடும்பத்தினரின் வரதட்சனை கொடுமையாலும் மனமுடைந்த சுதா பின்வந்த நாள்களில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் நடத்திய விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

சுதா தற்கொலை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.முகமது பரூக் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அவர் நேற்று தீர்ப்பு பிறப்பித்தார். அத்தீர்ப்பில், ராஜாவுக்கு 10 அண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ராஜாவின் சகோதரி ஆனந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.

இதையும் படிக்கலாம்: 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை -திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் கிணற்றில் பிணமாக மீட்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com