தகாத உறவினால் கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது..!
ராசிபுரம் அருகே தகாத உறவினால் கணவனை தாக்கி கொலை செய்ய முயன்ற மனைவியையும் கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போதமலை ஜேஜே காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேசன்-பிரியா தம்பதியினர். கூலி தொழிலாளியான இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் ஒரு ஆண்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மல்லூர் பகுதியை சேர்ந்த கெளதம்ராஜ் என்பவருடன் பிரியாவிற்க்கு தகாத உறவு இருந்துள்ளது. இதனைக் கண்டு முருகேசன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் முருகேசனுக்கும், பிரியாவிற்கும் இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருந்ததால் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரியா தனது கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு காதலன் கெளதம்ராஜிடன் சேர்ந்து முருகேசனை தாக்கி உள்ளனர். மேலும் அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது பலத்த காயத்துடன் அவர்களிடமிருந்து தப்பிய முருகேசன், ராசிபுரம் காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து முருகேசன் மனைவி பிரியா மற்றும் அவரது காதலன் கெளதம்ராஜ் ஆகியோரை ராசிபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகின. இதனைதொடர்ந்து கெளதம்ராஜ் முருகேசனை கொலை செய்வதர்காக கொண்டுவந்த கத்தி,கையுரை மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.