பாஜக பட்டியல் அணி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜிநகரில் வசித்து வரும் பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் மதனகோபால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
பாஜக மதனகோபால்
பாஜக மதனகோபால்முகநூல்

சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜிநகரில் வசித்து வருபவர் மதனகோபால். இவர் பாஜக சென்னை கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவராக உள்ளார். நேற்று இவரது வீட்டிற்குள் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று நுழைந்து கொலைவெறியோடு மதனகோபாலை தேடியுள்ளது.

பஜக மதனகோபால்
பஜக மதனகோபால்முகநூல்

அவர் அங்கு இல்லாததால், அச்சுறுத்தும் வகையில் பெட்ரோல் வெடிகுண்டை வீசி சென்றுள்ளது. இதற்கிடையில், அதே பகுதியில் நேற்று வேறொரு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக மதனகோபால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மதனகோபால் சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com