\
அண்ணிக்கு பாலியல் தொல்லை: தட்டிக்கேட்ட கொழுந்தன் கொலை!

அண்ணிக்கு பாலியல் தொல்லை: தட்டிக்கேட்ட கொழுந்தன் கொலை!

அண்ணிக்கு பாலியல் தொல்லை: தட்டிக்கேட்ட கொழுந்தன் கொலை!
Published on

அண்ணிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததைத் தட்டிக்கேட்ட கொழுந்தன், பட்டப்பகலில் இன்று வெட்டிக்கொல்லப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நெரு என்கிற சீனிவாசன். கூலிவேலை செய்துவருகிறார். அண்ணன் ஸ்டீபன் வீட்டில் இருந்து தினமும் வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சாம்சான், அவர் தம்பி மார்டின் ஆகியோர் ஸ்டீபன் மனைவி சத்யாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்களாம். இதை நெரு தட்டிக்கேட்டார். இதனால் தகராறு எற்றபட்டது. சத்யா வியாசர்பாடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் இருவரையும் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சாம்சனும் மார்டினும் நெருவை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி இன்று காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார் நெரு. அப்போது அவர் வீட்டின் அருகில் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த இருவரும் நெருவை சரமாரியாக வெட்டினர். இதில் நிலை குலைந்த நெரு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அப்பகுதியினர் வியாசர்பாடி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாம்சன் மற்றும் மார்டினை தேடிவருகின்றனர். 
இந்தக் கொலை காரணமாக அந்தப் பகுதியில் பதட்டம் எற்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com