\
பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசுக் கொலையா என விசாரணை

பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசுக் கொலையா என விசாரணை

பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசுக் கொலையா என விசாரணை
Published on

(கோப்பு புகைப்படம்)

மதுரை சோழவந்தானில் பிறந்து 4 நாட்கள் ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டுத் தெருவைச் சேர்ந்த தவமணி-சித்ரா தம்பதிக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10-ந்தேதி 4-வதாக பெண்குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் பிறந்து 4 நாட்களே ஆன நிலையில் 4வதாக பிறந்த குழந்தை திடீரென உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் உடலை வீட்டின் அருகே உள்ள முட்புதரில் புதைத்துள்ளனர்.இது தொடர்பாக அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடற்கூறாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நான்காவதும் பெண் குழந்தை பிறந்ததால் திட்டமிட்டு சிசு கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணைன் நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com