நண்பர்களால் கொலை செய்யப்பட்ட காணாமல் போன கல்லூரி மாணவர்

நண்பர்களால் கொலை செய்யப்பட்ட காணாமல் போன கல்லூரி மாணவர்
நண்பர்களால் கொலை செய்யப்பட்ட காணாமல் போன கல்லூரி மாணவர்

தஞ்சையில் காணாமல் போன கல்லூரி மாணவர் 40 நாட்களாக பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை வடக்கு வாசல் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவரின் மகன் சரவணன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சரவணன் கடந்த 40 நாட்களுக்கு முன்பு காணமல் போனார். பல இடங்களில் தேடியும் சரவணன் கிடைக்காததால் அவரின் பெற்றோர் நேற்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சரவணனின் 5 நண்பர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையில் சரவணன் கொலை செய்யப்பட்டு கூடலூர் வெண்ணாற்றின் நடுவில் புதைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் நண்பர்களுக்கு இடையே‌ ஏற்பட்ட தகராறில் சரவணன் கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த டிஎஸ்பி தமிழ்செல்வன் தலைமையிலான காவல் துறையினர், சரவணனின் உடலைத் தோண்டி எடுத்து தஞ்சை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்த சரவணனின் நண்பர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com