தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு
கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு விற்பனைக்காக கஞ்சா கடத்திய கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த
வாலிபர் ஒருவர் தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள-குமுளி சோதனைச்சாவடியில் கேரளசுங்கத்துறையினரால் கைது
செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியின் கேரளசுங்கத்துறை சோதனைச்சாவடியில் கேரள சுங்கத்துறையினர் சோதனையில்
ஈடுபட்டிருந்ததனர். தமிழகத்தின் குமுளி பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில்
சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலம்
எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஷகில் (30) என்பதும் அவரது பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கி
கடத்தியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்த கேரள
சுங்கத்துறையினர், அவரை பீருமேடு கிளைச்சிறையில் அடைத்தனர்.