நெல்லை அருகே திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் மனைவியை கணவனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஜெயில் வார்டனாக பணியாற்றி வருபவர் பாலகுரு. கடந்த மாதம் 31 ஆம் தேதி வேலம்மாள் என்பவருடன் பாலகுருவுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வரும் பாலகுரு, தனது மனைவி வேலம்மாவிடம் திருச்செந்தூர் போகலாம் என சொல்லி அழைத்துச் சென்றுள்ளார். திருச்செந்தூர் அழைத்துச் செல்லும் வழியில் பொட்டல் என்ற இடத்தில் பாலகுரு, வேலம்மாளை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதன் பின்னர் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் பாலகுரு சரணடைந்தார். மேலும் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை செய்ததாக வாக்குமூலமும் அளித்துள்ளார்.