\
மீனவர் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டை – உலர வைத்து விற்க முயன்ற மீனவர் கைது

மீனவர் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டை – உலர வைத்து விற்க முயன்ற மீனவர் கைது

மீனவர் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டை – உலர வைத்து விற்க முயன்ற மீனவர் கைது
Published on

ராமேஸ்வரத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்புடைய 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது, செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஜனதன் என்பவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது வலையில் 30 கிலோ எடை கொண்ட கஞ்சா மூட்டை சிக்கியுள்ளது.

இதையடுத்து மீனவர் ஜனதன் அவரது வலையில் சிக்கிய கஞ்சா மூட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து ஈரம் இல்லாமல் வெயிலில் உலர வைத்து விற்பனையில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஐஜி ஸ்பெஷல் குற்றத்தடுப்பு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தள்ளது.

ரகசிய தகவல்களை அடுத்து ராமேஸ்வரம் துறைமுக போலீசார் உதவியுடன் அங்கு விரைந்து சென்று விற்பனைக்காக உலர்த்தி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஜனதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கஞ்சா கடலில் இருந்து கொண்டு வந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருவதோடு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 7 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com