பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடி கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடி கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடி கைது
Published on

மேட்டூர் அருகே வீச்சருவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் சிபி (22) .இவர் மீது கடந்த ஆண்டு கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவலை கிடைத்துள்ளது.

இதையடுத்து இன்று மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்தச் சென்ற சிபி-யை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்துர அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கொடூர குற்றவாளிகள் பலர் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் போர்க்கால நடவடிக்கை எடுத்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com