\
புதுக்கோட்டை: அரசுப்பள்ளி ஆசிரியையை குடிபோதையில் தாக்கிய நபர் கைது

புதுக்கோட்டை: அரசுப்பள்ளி ஆசிரியையை குடிபோதையில் தாக்கிய நபர் கைது

புதுக்கோட்டை: அரசுப்பள்ளி ஆசிரியையை குடிபோதையில் தாக்கிய நபர் கைது
Published on

ஆலங்குடி அருகே அரசுப் பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியையை வகுப்பிற்குள் புகுந்து குடிபோதையில் தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சித்ராதேவி. இவர் வழக்கம் போல நேற்று பள்ளியில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் குடி போதையில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சித்ரா தேவியை கன்னத்தில் அறைந்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஆசிரியை சித்ராதேவி வடகாடு காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியையை தாக்கிய சித்திரை வேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com