கணவன் மீது கோபம்... மகனுக்கு சூடுவைத்த கொடூர தாய்; அடுத்தடுத்து சிறுவனுக்கு நிகழ்ந்த கொடுமைகள்!

கணவன் மீது உள்ள கோபத்தில் பெற்ற மகனை தாயே கொடுமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை கொடுமைப்படுத்தும் தாய்
சிறுவனை கொடுமைப்படுத்தும் தாய் புதிய தலைமுறை

ஆந்திர மாநிலம், மாச்சர்லா நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் வெளியூரில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி வெங்கட்ரமணா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மகனை கொடுமைப்படுத்தும் தாய் வெங்கட்ரமணா
மகனை கொடுமைப்படுத்தும் தாய் வெங்கட்ரமணா

இந்த நிலையில் வெங்கட்ரமணாவுக்கும், தம்பி முறை கொண்ட இளைஞர் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சங்கர், வெங்கட்ராமணாவை கண்டித்ததாகவும், இருந்தபோதிலும் வெங்கட்ரமணா அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுவனை கொடுமைப்படுத்தும் தாய்
ஆப்கன்: பெண்கள் நடிக்கும் நாடகங்களுக்கு தடை; பெண் நிருபர்களுக்கு ஹிஜாப் கட்டாயம்

இதனையடுத்து மன வேதனை அடைந்த சங்கர் மனைவியை விவாகரத்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட வெங்கட்ரமணா கணவன் மீது ஏற்பட்ட கோபத்தில் தன்னுடைய மகனைக் கடுமையாகத் தாக்கி, சூடு வைத்தும், தண்ணீரில் முகத்தை அழுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார். வெங்கட்ரமணாவின் ஆண் நண்பர் தன்னுடைய செல்போனில் அதை வீடியோ எடுத்து சங்கருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த சங்கர் மனைவியிடம் சிக்கித்தவித்த மகனை மீட்டுச் சென்றுள்ளார். பின்னர் விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சிறுவனைப் பெற்ற தாய் அடித்துக் கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com