குற்றம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது
அறந்தாங்கி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 23 வயது இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, அறந்தாங்கி மாணிக்கம் குடியிருப்பை சேர்ந்த அஜித்குமார் என்ற 23 இளைஞர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் அஜீத் குமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.