ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை அளிக்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலை தொடர்ந்து அவசரச்சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. சட்டம் அமலுக்கு வந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த் என்பவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் குடும்பத்தினருடன் பயணித்த 9 வயது சிறுமிக்கு நள்ளிரவில் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை ரயிலில் முன்பதிவு செய்து பயணித்தோம். அப்போது நள்ளிரவு 1மணியளவில் எங்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் முன்பதிவு செய்யவில்லை. ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் மட்டுமே பெற்றிருந்தார். டிக்கெட் பரிசோதகரிடம் பணம் கொடுத்து இந்த பெட்டிக்கு அவர் வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. நள்ளிரவில் குழந்தை திடீரென கூச்சலிட்டாள். எனது தம்பியிடம் ‘மாமா, இந்த ஆள் என்னை தப்பா தொடுறாரு’ என கூறினாள். விசாரித்ததில் குழந்தைக்கு முத்தமிட்டுள்ளார். அவளை தவறாக தொட முயற்சித்தாக கூறினாள்’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கோவை மற்றும் ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையில் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக பயணச்சீட்டு பரிசோதகரிடம் முறையிட்டுள்ளனர். ரயில் ஈரோடு நிலையம் வந்தடைந்ததும் பாலியல் தொல்லை கொடுத்த நபர் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டதும் தெரியவந்ததது. 

இதனை அடுத்து பிரேம்‌ ஆனந்த் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com