Murder case
Murder casept desk

சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு - திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேர் கைது

சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 9 பேரிடமும் கொலை குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய சேலம் மாநகர போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று காலை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சண்முகத்தின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Arrested
Arrestedpt desk

“இந்த கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். கூலிப்படையை ஏவிய திமுக பிரமுகர் சதீஷை கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கொலை குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Murder case
‘திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க’- படுகொலை செய்யப்பட்ட சேலம் அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்!

இந்நிலையில், தனிப்படை போலீசார் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், திமுக கவுன்சிலர் தனலட்சுமி கணவர் சதீஷ் (48), அருண்குமார் (28), முருகன் (23), பாபு (45), சீனிவாசன் (25), பூபதி (25), கருப்பண்ணன் என்ற சந்தோஷ் (31), கௌதமன் (33), நவீன் (25) ஆகிய 9 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.

கஞ்சா விற்பனையில் திமுக பிரமுகர் சதீஷ் ஈடுபட்டு வந்ததாகவும், அதை அதிமுக நிர்வாகி சண்முகம் போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரத்தில் கூலிப்படை மூலம் சதீஷ் கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder case
கூடங்குளம் | “உள்ளூரில் படித்த இளைஞர்கள் இருக்கும்போது நேபாளர்களை பணியமர்த்துவதா?”–வெடித்த போராட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com