“இந்த மெசேஜ கொஞ்சம் க்ளிக் பண்ணுங்க”- நாமக்கல் கல்லூரி மாணவியிடம் 87 ஆயிரம் மோசடி

“இந்த மெசேஜ கொஞ்சம் க்ளிக் பண்ணுங்க”- நாமக்கல் கல்லூரி மாணவியிடம் 87 ஆயிரம் மோசடி
“இந்த மெசேஜ கொஞ்சம் க்ளிக் பண்ணுங்க”- நாமக்கல் கல்லூரி மாணவியிடம் 87 ஆயிரம் மோசடி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியிடம் இணையம் மூலம் 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாலைப் பகுதியில் வசிப்பவர் சுரேஷ். இவரது மகள் சௌந்தர்யா. இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அலைப்பேசி எண்ணிற்கு ஜிபே என்ற இணையதளம் மூலம் தொடர்ச்சியாக குறுந்தகவல் வந்ததாகக் சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செளந்தர்யாவை தொடர்பு கொண்டு தாங்கள் அனுப்பிய குறுந்தகவலைத் திறந்து க்ளிக் செய்யும்படி கூறியுள்ளார். அதன் படி செளந்தர்யாவும் குறுந்தகவலை கிளிக் செய்ததாகத் தெரிகிறது. அவர் கிளிக் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கியிலிருந்த 87 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது.

உடனடியாக சுரேஷ் வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தைக் கூறியுள்ளார். ஆனால் அவரோ இதே போல பலர் மோசடி நபர்களிடம் சிக்கி தங்களது பணத்தை இழந்துள்ளனர் என்றும் இது தொடர்பாக தங்களால் ஏதும் செய்ய இயலாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுரேஷ் உடனடியாக குமாரபாளையம் காவல் துறையில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் இது தொடர்பான புகார்களை சைபர் குற்ற காவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதையடுத்து அவர்கள் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com