குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்; 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 50 பள்ளி மாணவர்கள் உள்பட 80 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா முட்டத்தூர் கிராமத்தில் நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் குல்பி ஐஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை வாங்கி சாப்பிட்ட 50 பள்ளி மாணவர்கள் உட்பட 80 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நள்ளிரவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள பள்ளி குழந்தைகள் என்பதால் முட்டத்தூர் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கெட்டுப்போன குல்பி ஐஸ் சாப்பிட்டதன் காரணமாகதான் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இருசக்கர வாகனத்தில் குல்பி ஐஸ் விற்பனை செய்த ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்த கண்ணன்(45) என்பவரை கஞ்சனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் ‘குல்பியில் என்ன கலக்கப்பட்டது, பள்ளி மாணவர்கள் மயக்கம் அடந்ததற்கான காரணம் என்ன’ என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com