ராமநாதபுரம்: நடுக்கடலில் இலங்கையைச் சேர்ந்த 8 பேர் கைது!

இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில் சோதனை செய்ததில் இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள் கடத்திய நால்வர் கைது செய்யப்பட்டனர். மேலும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 8 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்
srilankan
srilankanpt desk

இலங்கையைச் சேர்ந்த நபர்கள் சிலர், கடல்வழியாக தலைமன்னாரில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து கப்பலில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

srilankan
srilankanpt desk

அப்போது இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த நான்கு மீன்பிடி பைபர் படகுகளையும் அதிலிருந்த 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து 8 மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் கரைக்கு அழைத்து வந்தனர்.

இதற்கிடையே நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த பைபர் படகில் இருந்தவர்கள் இந்திய கடலோர காவல் படை வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

arrest
arrestpt desk

இதனை கண்ட கடலோர காவல் படை வீரர்கள் அந்த படகை மடக்கிப் பிடித்து படகில் ஏறி சோதனை செய்தனர். அப்போது அதில், சமையல் மஞ்சள் மூட்டைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் படகில் இருந்த நால்வர் மற்றும் இலங்கை மீனவர்கள் 8 பேர் என மொத்தமாக 12 பேரையும் அவர்களது 5 படகுகளையும் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், மண்டபம் படகில் இருந்த ஈசாக், முகைதீன், வாசிம், உபயதுல்லா ஆகியோரிடம் 600 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கடல் வழியாக இலங்கை புத்தளத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் இலங்கை சேர்ந்த ரோக்சன், ஜூட், தினேஷ் உள்ளிட்ட எட்டு மீனவர்கள் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வந்ததாக தெரிவித்தனர்.

cost guard
cost guardpt desk

இதையடுத்து மண்டபத்தைச் சேர்ந்த படகையும் அதிலிருந்து சமையல் மஞ்சள், கடல் அட்டை மற்றும் நால்வரையும் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைக்காக ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை மீனவர்கள் எட்டு பேரையும் மண்டபம் மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள், கடத்தல் தங்கத்தை மண்டபத்தைச் சேர்ந்தவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து சமையல் மஞ்சள் மற்றும் கடல் அட்டைகளை வாங்கிச் செல்ல நடுக்கடலில் காத்திருந்த போது பிடிப்பட்டனரா என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com